September 11, 2011
அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தன் எழுதுவது...
அன்புள்ள முதல்வருக்கு ஆசை ஆசையாய் முதல் கடிதம் ! நான் நலம் தங்களின் நலம் அறிய ஆவல். தங்களின் கடந்த
நான்கு மாத ஆட்சிப்பொறுப்புக்கும், இனி வரப்போகும் ஆட்சிக்கும், எங்களை வழிநடத்தும்
தங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவருக்கும் என் முதற்கண் முத்தான வணக்கங்கள்.இங்கே எனது
விருப்பத்தை பதிவிட்டுள்ளேன்.படித்து பார்த்து தாங்கள் செயல்படுத்துங்கள்.
எந்த ஒரு மனிதனும், தான்
கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதித்து, அதன்
மூலம் ஒரு பொருளை வாங்கினால்,
அதனுடைய மதிப்பே தனிதான். அதே
பொருள் அவனுக்கு இலவசமாக கிடைக்கும் போது,
அதன் மதிப்பை அறியமாட்டான். தவணை
முறையில், ஒரு டிவி வாங்கினால், அதை
தன் கண்ணாக பாவித்து, பாதுகாத்து பயன்படுத்துவான். அதே டிவி அரசாங்கத்தால்
இலவசமாக கிடைத்தால், அதை துச்சமாக நினைப்பான்;
இது கடந்த கால உண்மை.
இலவச டிவி கொடுத்தார்கள்
என்ன நடந்தது? கள்ளச் சந்தையில் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறுக்கு அடுத்தவருக்கு கைமாற்றப்பட்டுள்ளது.
மனசாட்சிப்படி
பார்த்தால் டி.வி வாங்கிய எத்தனை பேர் தங்களது வீட்டில் அதை பயன்படுத்துகிறார்கள் என்பதை
ஓர் கணக்கு போட்டுப் பாருங்களேன்.உண்மை புரிய வரும் உங்களுக்கு! கடந்த ஆட்சியில்
வழங்கிய இலவசங்களுக்கு அளவே இல்லை. எனினும் தமிழக மகாஜனங்கள் இலவசங்கள் எங்களுக்குத் தேவையில்லையென்று, அவற்றை துச்சமென எண்ணி,
ஆட்சிக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்து,
பாடம் புகட்டிவிட்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் இலவசங்கள் என அறிவித்து,அதனை
வெற்றிகரமாக செயல்படுத்தியும் விட்டீர்கள் மிக்க நன்றி
ஆனால் தாங்கள்
தரும் இலவசங்கள், உண்மையில்
வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்குப் போய்ச்
சேர்ந்து, பயன்பட்டால், அது நன்மையே.இருபது கிலோ அரிசி இலவசமாக
வழங்குவது சாதாரண விஷயமா? அதை
பெற்றுக்கொண்டு மதிப்பிற்குரிய மகாஜனங்கள் அப்படியே,
"மாடி வீட்டு ஏழைகளுக்கு' கிலோ
நான்கு அல்லது ஐந்து ரூபாய்க்கு
விற்றுவிடுகின்றனர். நாற்பது ரூபாய் கொடுத்து,
ஒரு கிலோ அரிசி வாங்குபவர்களுக்கு,
நான்கு ரூபாய்க்கு கிடைக்கும் போது வேட்டை
தான்.இச்சூழலில் கிரைண்டர்,
மிக்சி, மின்விசிறி, ஏன் லேப்டாப்பும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ஆகவே தாங்கள் தரும்
இலவசங்கள் அனைத்தும் வழிதவறி மாடிவீட்டு மகாஜனங்களுக்கு செல்வதை எப்படியேனும் இரும்புக்கரம்
கொண்டு தடுத்து நிறுத்த முடிவெடுங்கள் அல்லது பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதைகற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தாலும் நலமே !
நன்றி !
டிஸ்கி
1.ஆனந்தன் : கடந்த தேர்தலில் ஜனநாயக கடமை தவறாமல் வாக்களித்த மகாஜனத்தில் ஒருவன்.
டிஸ்கி
1.ஆனந்தன் : கடந்த தேர்தலில் ஜனநாயக கடமை தவறாமல் வாக்களித்த மகாஜனத்தில் ஒருவன்.
2.கடந்த ஆட்சியில் ஓர் ஆனந்தி கடிதம் எழுதினார் எழுதிய கடிதம் அந்த முதல்வரை சென்றடைந்தது.
நண்பர்களே! கடிதம் பிடித்திருந்தால்
படித்துவிட்டு மறக்காமல் வாக்களித்து கருத்துக்களையும் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்..அதுவே முதல்வரிடம் கொண்டு
சேர்க்கும் எளிய வழி !
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)









13 Responses to “அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தன் எழுதுவது...”
Sep 11, 2011, 7:47:00 PM
நன்றாக சொன்னீர்கள்! ஆனால் இதை காதில் வாங்குமா அரசு!
Sep 11, 2011, 8:43:00 PM
@ thalir
//நன்றாக சொன்னீர்கள்! ஆனால் இதை காதில் வாங்குமா அரசு! //
முதல் வரிகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே...
எதிர்பார்ப்போம் நல்லது நடக்கும்
Sep 11, 2011, 10:47:00 PM
ஓட்டுக்கள் இருக்கும் வரை இலவசங்கள் இருக்கும் நண்பா!
Sep 11, 2011, 11:11:00 PM
@ சீனுவாசன்.கு
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 12, 2011, 6:59:00 AM
ஆனந்தன் கடிதம் அவசியமே!
Sep 12, 2011, 8:14:00 AM
@ ஷீ-நிசி
//ஆனந்தன் கடிதம் அவசியமே! //
மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 12, 2011, 12:50:00 PM
//இலவசங்கள் எங்களுக்குத் தேவையில்லையென்று, அவற்றை துச்சமென எண்ணி, ஆட்சிக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்து, பாடம் புகட்டிவிட்டனர்.//
அய்யாவை விட அம்மா அதிகமா தராங்களாம் என்று பேசி தான் மக்கள் ஓட்டளித்ததாக நினைவு..
Sep 12, 2011, 6:54:00 PM
@ suryajeeva
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 15, 2011, 4:07:00 PM
உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெறச்செய்து சம்பாதிக்கலாமே? உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? more detail see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html
Sep 15, 2011, 6:57:00 PM
@ sheik
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Oct 8, 2011, 6:12:00 PM
//பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதைகற்றுக் கொடுக்க//
தரையில மீன் பிடிக்க கற்றுக் கொடுத்து என்ன பயன்? தண்ணீர் வேண்டுமே! தமிழகம் வானம் பார்த்த பூமி....தமிழகம் மட்டுமல்ல இன்னும் நிறைய வானம் பார்த்த பூமிகள் இந்தியா எங்கும் உண்டு.
சரி! வெஜிடேரியனா இருந்தா! விவசாயம் பண்ண கத்துக்கொடுக்கலாமா? அதுக்கும் தண்ணீர் வேணும்! அப்ப விவசாயக் கூலியாத்தான் போக முடியும். அதுல ரொம்ப துட்டுக் கூறைச்சல்னு எல்லாரும் கொத்தனார் வேலைக்கும், சித்தாள் வேலைக்கும் வந்துட்டாங்க அதைவிட நான்கு மடங்கு கூலி இந்த வேலையில....என்னத்தை பன்ன....கன்பார்ம் உணவுப்பஞ்சம் தான்.
//............"மாடி வீட்டு ஏழைகளுக்கு' கிலோ நான்கு அல்லது ஐந்து ரூபாய்க்கு விற்றுவிடுகின்றனர்..........//
மாடி வீட்டு ஏழையும் இன்னும் இந்த அரிசியை வாங்கும் நிலையில் தான் இருக்கிறார்....அவர் என்ன பண்ணுவார் பாவம்! காருக்கும், அடுக்குமாடி வீட்டுக்கும் ஆசைப்பட்டு மொத்த துட்டையும் எடுத்து அநியாய வட்டி கடனுக்காக வங்கியில் போட்டுட்டு இருப்பார்....
ஆனால், "மாடி வீட்டு ஏழைக்கு விற்கிறார்கள்" இது உண்மையல்ல...(ஒன்றிரண்டு இருக்கும் டிபனுக்காக வாங்கியிருப்பார்கள்)..
இது பெரும்பலும், ரெடிமேட் இட்லி மாவு தயாரிப்பாளர்கள், ஒட்டல் வியாபாரிகள், அரசி மாவு விற்பவர்கள், மளிகைக்கடை, கையேந்திபவன் என எல்லா இடத்திற்கும் இந்த அரிசி பிளாக்குல போகும்!.... அந்த 4 ரூபாய் 3 ரூபாய் கணக்குல தான் போகும்.
இப்படி விற்ற காசில் தான் நியாயவிலைக்கடையின் ஊழியர்களுக்கான சம்பளமும் கொடுக்கப்படுகிறது...இது 100 க்கு 200 சதவீதம் உண்மை. அங்குள்ள நிரந்தர ஊழியர்களுக்கான மாத சம்பளம் வெறும் 2500 ரூபாய் தான். (எல்லாம் பட்டதாரிகள், பட்டமேற்படிப்பு படித்தவர்கள்) தற்காலிக ஊழியர்களுக்கு இந்த அரிசி வித்த பணம் தான் சம்பளம். ரேஷன் கடையை மெயின்டெய்ன் பண்ணுவதற்கும் இந்த அரிசியை வித்து தான் செட்டில் பண்ணவேண்டும். மேல் அதிகாரிகளுக்கு கிம்பளவும் இதிலிருந்து தான் போகும். (ஒபன் மீட்டிங்கிலேயே மேலதிகாரிகளே இது பற்றி பேசுவார்கள். இது பெரிய விஷயமில்லை)
அரிசி மட்டுமல்ல, து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு என எல்லா பருப்புகளும் இப்படித்தான் போகும். அது அரசாங்கத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
அந்த துறை சார்ந்தவருக்கு மற்றும் அரசாங்கத்துக்கு மட்டும் தான் இந்த விஷயம் தெரியும். மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அருகில் உள்ள கடைக்கு சென்று ரகசியமாக விசாரிக்கலாம். இது இப்போது அல்ல எப்போதுமே இப்படித்தான். ரேஷன் கடை என்று துவங்கப்பட்டதோ அன்றிலிருந்து இப்படித்தான். தமிழகத்தில் மொத்தம் 30000 கடைகள் உள்ளன அதை சுற்றி நான்கு ஊழியர்கள் வீதம் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
அப்படின்னா அரிசி கடத்தலை பிடிப்பது...அது அரிசி கடத்தல்காரர்கள் அல்ல. அரிசி டீலர்கள்...அவர்களுக்கு அப்படித்தான் பெயர். எழுதறதுதான் எழுதறீங்க இதையும் சேர்த்து எழுதுங்க. இன்னும் எவ்வளவோ இருக்கு?
Oct 8, 2011, 8:41:00 PM
@ நம்பி
பதிவினை சுவாசித்து ஆழமான பார்வையுடன்,பல அரிய தகவல்களுடன் கருத்துரையிட்ட தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
சம்பத்குமார்
Oct 8, 2011, 8:50:00 PM
//பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதைகற்றுக் கொடுக்க //
தகவலுக்காக...இந்த பழமொழி...பற்றி ஏற்கனவே கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கும் பொழுது ஊடகத்தின் வாயிலாக விளக்கமளித்துள்ளார்...இது பற்றி அன்றைய நிலையில் ஊடகத்தில் வெளியிடப்பட்டது...இதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. இதை ஒரு சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சரி, அடுத்து இந்த இலவசங்கள் வழங்குவது பற்றியும் ஒரு அலசல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு 10 மாதத்திற்கு முன் நடபெற்றது...தேதி பிறகு குறிப்பிடுகிறேன்.....
ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்....
இந்தியாவில் இலவசங்கள் பெறாதவர் என்று யாருமில்லை......
வசதிபெற்றவர் வரிவிலக்காக இலவசங்களை பெறுகிறார்...வசதி பெறாதவருக்கு வறுமை கோட்டில் இருப்பவருக்கு டி.வி யும் பிரிட்ஜிம் பெரிய விஷயம்.
3,00,000 வருமானம் உடையவருக்கு வரிவிலக்கு என்பது இலவசம் தான்.
அதே போல் விசைத்தறி உரிமையாளருக்கு கூலி உயர்வு...(தனியார் துறை ஒத்துக்கொள்ளாத வேண்டா வெறுப்பாக அறிவித்த நிலையில்..இது இலவசம் தான்) ..நூல்விலைக்கு மானியம், பெட்ரோல் விலை உயர்வை கட்டுபடுத்த மானியம் போன்ற அனைத்துமே இலவசங்கள் தான்.
தொழிலதிபருக்கு ரா மெட்டிரியலுக்கு கிடைக்கும் சலுகை இலவசம்,
ஒரு குடிசை வாசிக்கு மின்சாரம் வழங்கப்படுவது இலவசம், ஆனால் இது ஒரு 30 வருடங்களுக்கு முன் இது பெரிய விஷயமாகப்பார்க்கப்பட்டது. இப்போது காங்கிரீட் வீடு இலவசம். ஆனால் இது அன்று வழங்கப்பட்டிருந்தால் பெரிய விமர்சனம் எழுந்திருக்கும்.
அது போல அன்றைய காலகட்டத்தில் இது மாதிரி வரிவிலக்கு அளிக்கப்பட்டாலும் பெரிய விமர்சனமாக எழுந்திருக்கும்.
அது மாதிரி ஒவ்வொரு கேட்டகிரி மக்களையும் இந்த இலவசங்கள் வெவ்வேறு வடிவில் சென்றடைகிறது. மானியமாக, வரிச்சலுகையாக, பொருட்களாக...இன்னும் இநர சலுகைகளாக ஆக எல்லோருமே இலவசங்களை பெறுகின்றனர்.
விமான டிக்கெட்டுகளுக்கு விழாக்காலச் சலுகை, இந்திய சிவில் விமானங்கள் ஒவ்வொன்றும் மாறி மாறி டிக்கெட் விலைக்குறைப்பை அறிவித்தன. வாமானத்தில் போவதே குதிரைக்கொம்பாக இருந்த நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் இந்தியாவிற்குள்ளேயே விமானத்தில் சுற்றி வந்தனர். இது நடந்தது சில வருடங்கள் முன்பு....இவையெல்லாம் நஷ்டத்தை ஏதோ ஒரு விஷயத்தில் அட்ஜஸ்ட் பண்ணியே இந்த சலுகைகள் வழங்கப்பட்டன.
அது தேர்தல் நோக்கமாக கூட இருக்கலாம். தவறில்லை. மக்கள் திருப்பதியடைந்தால் தானே வாக்களிக்கவே முன்வருவார்கள். மக்களுக்கு லாபம் கிடைச்சா சரி.....
இவையெல்லாம் அந்த நிகழ்ச்சியில் அலசப்பட்டது. பலரும் இதை எதிர்த்தவர்கள் கூட ஆமோதித்தனர். இந்த இலவசங்கள் கூட ஒரு சமுதாய பேரழிவைத்தடுப்பதற்காகத்தான் வழங்கப்படுகிறது.
ஏற்றத்தாழ்வுகள் அதிகமானால் வன்முறைகள் அதிகமாகும், நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ஒரு மூலக்காரணம் உண்டு.
அந்த மூலக்காரணத்தை கண்டுபிடித்து தீர்க்கவேண்டியது, அமைதியான முறைக்கு நாட்டை அழைத்துச் செல்வது தான் அரசியல் கட்சிகளின் கடமை.
அதற்காகத்தான் அரசியல் கட்சிகளின் தலைமையில் அரசு நடைபெறுகிறது. ஏனென்றால் மக்களோடு அதிக தொடர்புடன் இருப்பவர்கள். (அரசியல் கட்சிகள். அதற்கான் விமர்சனங்கள், வேறு வேறு அது இங்கு இப்போது தேவையில்லை...நியாயமான, பொதுவான காரணம் இது தான்)
இலவசங்கள் ஏன் வழங்கப்பட்டது?..அதற்கான ஆய்வுகள் என்ன? என்பதை பற்றியெல்லாம் அன்றைய நிகழ்ச்சிகளில் விவாதிக்கப்பட்டது. ஏன் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டது என்பது பற்றியும் அன்றைய நிக.ழ்ச்சியில் அலசப்பட்டது.
அதனால் தான் இது நீதிமன்றத்திலும் இதை எதிர்த்து தொடர்ப்பட்ட பொதுநல வழக்கில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.
குறைபாடுகள் அதனுடைய கட்சி, அதன் தலைமை, அவர்கள் பின்பற்றும் கொள்கை இதை வைத்து இந்த குளருபடிகள் வருகிறது அது வேறு விஷயம். இலவசங்கள் ஏற்றத்தாழ்வுகளை பேலன்ஸ் பண்ணுவதற்காகத்தான். அது எல்லோருக்கும் வெவ்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது. இதுதான் முழுக்க முழுக்க உண்மை.
இந்த ஊடக நிகழ்ச்சி இணையத்திலும் இருக்கிறது சென்று பார்க்கலாம். அரசு அதிகாரிகளும் பங்கு பெற்றனர். இங்கு அனைத்தையும் குறிப்பிடவேண்டுமென்றால் இடம் போதாது...வழிமாற்றை அப்புறம் தெரிவிக்கிறேன். தேடிப்பார்க்கலாம்.
நன்றி!
Post a Comment