September 7, 2011

வணக்கம்


வணக்கம் !.
நீண்ட காலம் கழித்து
மீண்டும் பார்க்க
வாய்த்ததற்காய்
தாய்மைபோல் பூரித்து
நெகிழ்ச்சியுடன்
மகிழ்ச்சி பரிமாறும்
தனி
மனிதப் பண்பு !

கை கூப்பி வணங்குதல் -
இது தொடுதலை 
விடுதலை செய்த
கொ(கெ)டுமுறை !

தகுதியில் குறைந்தவன்
மிகுதியாய் குனிந்து கும்பிடவேண்டும்
நிலையில் உயர்ந்தவன்
தலையசைத்தால் போதும்
விதிவிலக்கு போல
பதிலுக்கு வணங்க தேவையில்லை !

ஆம் !

சிலைபோல் கை கூப்புதல்
நிலையை உறுதி செய்யும் முதற்படி !
முகமன் தெரிவிக்க
அகமகிழ்ந்து கை கூப்பலாம்
ஆனால்

இருவர் கரங்கள் பிணைய 
ஒருமித்து உருவாகும் கைக் குலுக்கல்
நம் மனதின்
சங்கடமில்லா சமத்துவமே !



நண்பர்களே இன்றிலிருந்து இந்த தளம் www.tamilparents.com என்ற முகவரியில் வலம் வரப்போகின்றது.தங்கள்  மேலான ஆதரவு தேடி வருகிறது... இந்த புதிய முகவரியில் முதல் பதிவு...

4 Responses to “வணக்கம்”

கவி அழகன் said...
Sep 7, 2011, 4:15:00 AM

அருமை வாழ்த்துக்கள்


சம்பத்குமார் said...
Sep 7, 2011, 7:16:00 AM

@ கவி அழகன் said

//அருமை வாழ்த்துக்கள்//

வருகைக்குக்கும் முத்தான கருத்திற்க்குக்ம் மிக்க நன்றி நண்பரே...

நட்புடன்
சம்பத்குமார்


புங்கையூர் பூவதி said...
Sep 10, 2011, 1:53:00 AM

அருமை வாழ்த்துக்கள்


சம்பத்குமார் said...
Sep 10, 2011, 7:52:00 AM

@ புங்கையூர் பூவதி

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..

மீண்டும் வருக...

நட்புடன்
சம்பத்குமார்


;