September 6, 2011
சொல்ல முடியாத சோகங்கள்..
இவை
சொல்ல முடியாத
சோகங்களின்
சேகரிப்பின் சுருக்கம் மட்டுமே !
நேரம் ஆகிவிட்டது
!
தூரத்தில் அரட்டையடிக்கும்
அலுவலர்கள்
எங்கள் மீது அமர்ந்து
பணியாற்ற
தாங்களாய் ஏன்
இன்னும் வரவில்லை ?
அரசு அலுவலக நாற்காலிகள்
!
கும்பிட வந்தவர்கள்
நம்புகின்ற எங்களை
நிர்கதியாய் வெளியே
கழற்றிவிட்டுவிட்டு
தர்ம்மமின்றி உள்ளே
சென்றுவிட்டார்களே !
நாங்கள் செய்த
தவறுதான் என்ன ?
காலம் காலமாய்
வாயிற்படியில்
வருந்திக்
கிடக்கும் செருப்புகள்
!
நிம்மதியாய் வாழ
விடாமல்,
எங்களை அம்மணமாக்கி,
கண்ட இடங்களில்
மண்டி யிடவைடவத்து
தண்டனைத் தருகிறீர்களே
?
தெருவெங்கும் தங்கள்
சருமம் தெரியகூனிக்குறுகி
தேக்கமாகி துர்நாற்றம்
வீசும்
சாக்கடைகள் !
நம்பினால் நலம்
தரும் என்னை
அம்புகளால் துளைப்பதுபோல்
அலட்சியம் செய்து
விலக்கி வைக்கின்றார்களே
அழைத்தால் ஓடோடிவர
காத்திருக்கும்
உழைப்பின் ஏக்கங்கள்
!
ஐயோ தாங்கமுடியவில்லையே
தயைகூர்ந்து எங்களை
விட்டுவிடுங்கள்
ஓய்வெடுக்க முதுமையிலும்
எங்களுக்கு
விடுப்பும் வாய்ப்பும்
கிடையாதா ?
தஞ்சமடைந்த தம்பதிகளான
லஞ்சமும் ஊழலும்
!
நண்பர்களே.. இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களையும்,வாக்குகளையும் பகிர்ந்து விட்டுப்போங்களேன்..
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)










0 Responses to “சொல்ல முடியாத சோகங்கள்..”
Post a Comment