September 3, 2011
செருப்பு
வெறுப்பை வெளிக்காட்ட
பொறுப்பாய்
கரத்தில் ஏந்தப்படும்
முரட்டு ஆயுதம் !
ஒரு மனிதனை
தனித்தனியாளாய் தங்கள்
தலையில் சுமக்கும்
இரட்டை சகோதரர்கள் !
தண்ணீரில் கண்டம் என்பதால்
அண்டி வந்து
கையில் தஞ்சம் புகுந்தாலும்
வெயிலுக்கு ஈடுதரும் தோழன் !
பிடித்தவர்களை மட்டுமே
கடித்துக் குதறி
பல்லில்லாமல்
கவ்வும் கா(வ)ல்காரன் !
மனிதர்கள் புழங்கும்
இடத்திற்குள் புகும் உரிமை
வழக்கமாகத் தனக்கு
மறுக்கப்பட்டாலும்
வெறுப்படையா வழித்துணை !
தெருக்களின் தூய்மை பற்றி
ஒருவருக்கும் அக்கறையில்லை
என்ற அடிப்படை உண்மையை
நினைத்து அடிக்கடி
புன்னகைக்கும் தாழ்மையின் சின்னம் !
அடுத்தவரை
கடுமையாக அடிக்க,
விருப்பம் இல்லாவிட்டாலும்
விளாசித்தள்ளும்
சூழ்நிலைக்கைதி!
நண்பர்களே.. இந்த செருப்பு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் கருத்துக்களையும்,வாக்குகளையும் தாராளமாக வழங்கி விட்டுச் செல்லுங்கள்.அடுத்தவர்களும் இதை பார்க்க வரட்டுமே..
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)









10 Responses to “செருப்பு”
Sep 3, 2011, 12:04:00 PM
பாரத கண்டத்தை 14 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததை மறந்து விட்டீர்கள் போலும்.. # ராமாயணம்.
Sep 3, 2011, 12:13:00 PM
அருமை.
Sep 3, 2011, 1:33:00 PM
எல்லோரையும் கவரும் வண்ணம் படைதுள்ளீர்கள் செருப்பை(கவிதையை)...
மிக அருமை நண்பரே...வாழ்த்துகள்...
Sep 3, 2011, 6:38:00 PM
@ suryajeeva
//பாரத கண்டத்தை 14 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததை மறந்து விட்டீர்கள் போலும்.. # ராமாயணம். //
மறந்ததை ஞாபகப்படுத்திய நண்பருக்கு நன்றி..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 3, 2011, 6:40:00 PM
@ நண்டு @நொரண்டு -ஈரோடு
வாருங்கள் நண்பரே..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 3, 2011, 6:42:00 PM
@ ராஜா MVS
//எல்லோரையும் கவரும் வண்ணம் படைதுள்ளீர்கள் செருப்பை(கவிதையை)...
மிக அருமை நண்பரே...வாழ்த்துகள்...//
கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 4, 2011, 11:40:00 AM
கவிதை அருமை நண்பரே! என்னுடைய தளத்திலும் இதற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்.
Sep 4, 2011, 12:56:00 PM
செருப்புப் பற்றி ஒரு குறும் கவிதை எழுதி வைத்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் இன்று புரட்டிக் கொண்டு போன போது இதைக் கண்டேன். ஆச்சரியமடைந்தேன். ஓ. கே உங்களைப் போன்ற வரிகளின்றி நான் கவனிக்க வேண்டும். கவிஞர்களின் தனித்தன்மை இதுவன்றோ! பாராட்டகள் மிக நன்றாக உள்ளது.
வேதா. இலங்காதிலகம்.
Sep 4, 2011, 5:21:00 PM
கவிப்ரியன் said...
//கவிதை அருமை நண்பரே! என்னுடைய தளத்திலும் இதற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். //
தாங்கள் இணைப்பு கொடுத்ததிற்க்கு மிக்க நன்றி நண்பரே..
வருகைக்கும் கருத்திற்கும் கூட
நட்புடன்
சம்பத்குமார்
Sep 4, 2011, 5:25:00 PM
@ kovaikkavi said... 8
//செருப்புப் பற்றி ஒரு குறும் கவிதை எழுதி வைத்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் இன்று புரட்டிக் கொண்டு போன போது இதைக் கண்டேன். ஆச்சரியமடைந்தேன். ஓ. கே உங்களைப் போன்ற வரிகளின்றி நான் கவனிக்க வேண்டும். கவிஞர்களின் தனித்தன்மை இதுவன்றோ! பாராட்டகள் மிக நன்றாக உள்ளது.//
மிக்க நன்றி நண்பரே..
மீண்டும் வருக..
நலம் நாடும்
சம்பத்குமார்
Post a Comment