September 2, 2011
மழலைப்பருவம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வணக்கம் நண்பர்களே…இன்றைய பதிவில் நாம்
ஒவ்வொருவரும் கடந்து வந்த பருவத்தை நம் குழந்தைகளும் கடக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.பொதுவாகவே மழலைப் பருவத்தில் குழந்தைகள் தாயிடம்தான் மிகுந்த ஒட்டுதலோடு இருக்கும். முதன்முதலாக
பள்ளியில் சேர்க்கும் போது குழந்தைக்கும் ஏன் தாய்க்கும் மனது கஷ்டமாக இருக்கும். அதற்காக பள்ளியில்
சேர்த்தது முதல் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, குழந்தைகளை கவனிக்கக் கூடாது. அதே போல் குழந்தைகள் வீடு திரும்பியவுடன் பள்ளியில்
ஆசிரியர் அடித்தாரா, சக
பிள்ளைகள் அடித்தனரா என எதிர்மறையான கேள்விகள் கேட்கக்கூடாது. உங்களின்
ஆர்வக் கோளாறால், குழந்தைகள்
தினமும் எதையாவது
சொல்ல ஆரம்பித்துவிடும். ஆசிரியர்கள் என்றாலே அடிப்பார்கள் என்ற சிந்தனை
மனதில் பதிந்து விடும்.
ஒன்றாம் வகுப்பு வரை,
பிள்ளைகளிடம்
படிப்பைப் பற்றி அதிகம் பேசவேண்டாம். அந்த வயதில் சகபிள்ளைகளுடன் இயல்பாக
பழகுகின்றனரா, நல்ல
பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்கின்றனரா என்று கவனிக்கலாம். ஒவ்வொரு
பிள்ளைகளுக்கும் தனித் திறமை இருக்கும். மூன்று வயது
குழந்தைக்கும், மூன்றே
கால் வயது குழந்தைக்கும்
கூட அறிவின் தன்மை வித்தியாசப்படும். மேலும் வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஒரே வயதாக
இருந்தாலும், சில
மாதங்கள் வித்தியாசம் இருக்கும். எனவே பக்கத்து வீட்டு
பிள்ளைகளுடனோ, உடன்
பிறந்தவர்களுடனோ படிப்பை, மதிப்பெண்ணை
ஒப்பிட்டு பேச வேண்டாம்.
குழந்தைகள் இரண்டாம்
வகுப்பு படிக்கும் போதே, டாக்டராக வேண்டும்,
இன்ஜினியராக வேண்டும்
என திணிக்காதீர்கள். அது தவிர எவ்வளவோ துறைகள் நிறைய உள்ளனஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு துறையில் ஈடுபாடு, திறமை
இருக்கும். அத்திறமையை கண்டறிந்து, அதைநோக்கி
பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும். பத்தாம் வகுப்பு படிக்கும் போது இயல்பாக விட்டுவிட வேண்டும்.
நடனம், பாட்டு, இசை, விளையாட்டில் பிள்ளைகள் ஆர்வமாக
இருந்தால் கூட, பத்தாம்
வகுப்பு, பிளஸ்2
வில் அனைத்தையும்
நிறுத்தி விடுகின்றனர் பெற்றோர். இது பிள்ளைகள் மனதில் அதிக
மனச்சோர்வையும், படிப்பின்
மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும். ஓயாமல் படி, படி என்று சொல்வதை விடுத்து அவர்களுக்கு தேவையானதை செய்தால், அவர்களுக்கும் பதட்டம் இருக்காது.
பெற்றோரும் நிம்மதி
பெறலாம்.
நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.
|
|
Tweet |
Related Posts: ,
,
,
Subscribe to:
Post Comments (Atom)







10 Responses to “மழலைப்பருவம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்”
Sep 2, 2011, 12:20:00 PM
உண்மைதான். குறைந்தபட்சம் நான்கு வயதில் தான் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
Sep 2, 2011, 12:54:00 PM
அழகான பதிவு அநேகமாக கடைபிடிப்பவர்கள் யாரும் இருக்க போவதில்லை..
Sep 2, 2011, 3:35:00 PM
நன்றாக சொல்லி இருக்கீறீர்கள், பெற்றோர்களும் கடைபிடித்தால் நலம்..!
Sep 2, 2011, 3:36:00 PM
மிகவும் உபயோகமான பதிவு நண்பரே!
Sep 2, 2011, 9:02:00 PM
Prabu Krishna (பலே பிரபு)
//உண்மைதான். குறைந்தபட்சம் நான்கு வயதில் தான் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது எனது எண்ணம். //
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 2, 2011, 9:05:00 PM
@ suryajeeva
//அழகான பதிவு அநேகமாக கடைபிடிப்பவர்கள் யாரும் இருக்க போவதில்லை..//
இதைப் படித்து யாரேனும் ஒருவர் என்றாலும் சந்தோஷப்படும் முதல் உள்ளமாக இருப்பேன் நண்பரே..
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
மீண்டும் வருக
நட்புடன்
சம்பத்குமார்
Sep 2, 2011, 9:07:00 PM
@ இரவு வானம்
//நன்றாக சொல்லி இருக்கீறீர்கள், பெற்றோர்களும் கடைபிடித்தால் நலம்..!//
மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 2, 2011, 9:10:00 PM
@ஸ்ரீதர்
//மிகவும் உபயோகமான பதிவு நண்பரே!//
மிக்க மகிழ்ச்சி நண்பர் திரு.ஸ்ரீதர் அவர்களே
மீண்டும் வருக
நட்புடன்
சம்பத்குமார்
Sep 3, 2011, 8:33:00 AM
நண்பரே!
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும்
இடத்தில் என்பது பழமொழி
குழந்தை வளர்ப்பு முறைப்பற்றி
தெளி வாக எழுதுகிறீர்.
தங்கள் செய்வது மாபெரும் சமுதாயத் தொண்டு என்றே கருதுகிறேன் தொடர்ந்து வருவேன்
புலவர் சா இராமாநுசம்
Sep 3, 2011, 10:31:00 AM
@ புலவர் சா இராமாநுசம்
தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா...
தங்களை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்...
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment