September 1, 2011
தாயுள்ளம்
மார்பிலே தவழவிட்டு
மகனோடு கொஞ்சுகிறான்
என் மகன்!
இப்படித்தான் அவனை
ஈரமுடன் நான் வளர்த்தேன்!
எப்படித்தான் மறந்தானோ…
என்னை இன்று துரத்திவிட்டான்!
முதுமையில் தனிமையாய்
வறுமையின் கொடுமையோடு
தள்ளாடித் தவித்தபோதும்
விழிகள் பரபரக்கும்
தூரத்தில் நின்றேனும்
ஒருமுறை என் மகனைக் காண!
பிரார்த்தனை
வேறொன்றுமில்லை
கடைசிவரை கைவிடாமல்
பேரனாவது காக்க வேண்டும்
என் மகனை!
நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)








19 Responses to “தாயுள்ளம்”
Sep 1, 2011, 10:28:00 AM
கூட்டுக் குடும்பங்களைத் தொலைத்து பறவைகள் போல உயர்ந்த வீடுகளில் வசிக்கும் மனிதர்களுக்கு உயரத்திலிருந்து பார்த்தாலும் பணம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது.
10மாதம் கருவறையில் சுமந்த எனக்கு
என் மகன் வீட்டில் ஒரு சிறு அறை கூட கிடைக்கவில்லை என்னும் கவிதைதான் நினைவுக்கு வந்தது.
அருமையான சிந்திக்கத்தக்க பதிவு.
Sep 1, 2011, 10:50:00 AM
@முனைவர்.இரா.குணசீலன்
//10மாதம் கருவறையில் சுமந்த எனக்கு
என் மகன் வீட்டில் ஒரு சிறு அறை கூட கிடைக்கவில்லை//
கருணை உள்ளத்தோடு முதலில் கருத்துரையிட்ட நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Sep 1, 2011, 12:01:00 PM
இப்படிப்பட்ட மகன்கள் கட்டாயம் இறுதி காலத்தில் தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள்...
பெற்ற அன்னையை ஆனாதையாக்குவதை விட மிகப்பெரிய பாவம் வேறில்லை...
அர்த்தமுள்ள கவிதை...
வாழ்த்துக்கள்...
Sep 1, 2011, 12:02:00 PM
புலம்பும் தாய்
புலம்ப மறுக்கும் தந்தை..
புடவை பின்னால் ஒளிந்து கொண்ட மகன்...
மறந்து போனான்..
பெற்றதும் மகன் என்பதை...
Sep 1, 2011, 1:49:00 PM
புனித விவிலியம் கூட " உன் தகப்பனையும் தாயையும் கணம் பண்ணு " என்று போதிக்கிறது.
நல்ல பகிர்வு .....
Sep 1, 2011, 4:58:00 PM
உருக்கமான கவிதை
Sep 1, 2011, 5:12:00 PM
கண்கள் கலங்கி விட்டன நண்பரே!
Sep 1, 2011, 6:38:00 PM
அர்த்தமுள்ள கவிதை அருமை நண்பரே!
Sep 1, 2011, 6:49:00 PM
@கவிதை வீதி # சௌந்தர்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 1, 2011, 6:57:00 PM
@ suryajeeva
வருக்கைக்கு மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 1, 2011, 6:59:00 PM
@ Ungal nanban
//நல்ல பகிர்வு .....//
நன்றி நண்பரே..
மீண்டும் வருக..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 1, 2011, 7:01:00 PM
@ Jaleela Kamal
சிந்திக்க வேண்டியவர்கள் ஓரு கணம் சிந்திக்கட்டுமே..
நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 1, 2011, 7:04:00 PM
@ ஸ்ரீதர்
//கண்கள் கலங்கி விட்டன நண்பரே!//
பெற்ற தாயை கைவிடும் ஒருவராவது யோசிக்கட்டும் நண்பரே..
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 1, 2011, 7:06:00 PM
@ராக்கெட் ராஜா
நண்பர் ராக்கெட் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 1, 2011, 9:32:00 PM
''...பிரார்த்தனை
வேறொன்றுமில்லை
கடைசிவரை கைவிடாமல்
பேரனாவது காக்க வேண்டும்
என் மகனை...''
இந்த வரிகளை வாசிக்கும் போது வயிறு ''பகீர்'' என்கிறது. வாழ்த்துகள் சகோதரா!
Sep 1, 2011, 9:37:00 PM
@ kovaikkavi
மிக்க நன்றி திரு koviakavi அவர்களே..
மீண்டும் வருக..
நட்புடன்
சம்பத்குமார்
Sep 2, 2011, 3:33:00 AM
முதல் வருகை....
ஒவ்வொன்றும் அருமை. எனக்கு மிகவும் பிடித்தது
//
பிரார்த்தனை
வேறொன்றுமில்லை
கடைசிவரை கைவிடாமல்
பேரனாவது காக்க வேண்டும்
என் மகனை!
//
Sep 2, 2011, 7:47:00 AM
@ Prabu Krishna (பலே பிரபு)
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு பலே பிரபு அவர்களே...
பதிவுலகின் கத்துக்குட்டியான எனக்கு தங்களின் வலைப்பக்கம் பெரிதும் உதவியது..
நன்றி மீண்டும் வருக..
நட்புடன்
சம்பத்குமார்
Dec 13, 2011, 9:53:00 PM
தாயின் அன்பை உணராத பிள்ளைகளுக்கு இது ஒரு புதிர். "பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்ற வரிகளை நினைவுறுத்துகிறது.
தங்களின் படைப்பு மிக அருமை.
Post a Comment