August 7, 2011
இன்றைய அரும்புகள் நாளையசமுதாயத்தின் நறுமலர்களாக....
கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை. இருப்பினும், குழந்தைகள் தங்கள் அடிப்படை உரிமையை இழந்து தொழிலாளர்களாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்து மீட்கப்படும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருவது கவலை அளிப்பதாக உள்ளது. குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. ஆபத்தான தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை அறவே ஒழிக்க வேண்டும்
வறுமையும், கல்வியறிவின்மையுமே குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. இந் நிலையில் வறுமை தொடரும்வரை குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பது சிரமமே என்று மத்திய அரசு அமைத்த குழு தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, வறுமை, கல்வியின்மையைப் போக்கும் திட்டங்களில் முனைப்பு காட்ட வேண்டும். அப்போதுதான், இன்றைய அரும்புகள் நாளைய சமுதாயத்தின் சிறந்த மலர்களாக மணம் வீச முடியும்.
குழந்தைத் தொழிலாளர் முறை என்பது வெட்கப்பட வேண்டிய மற்றும் உடனடியாக ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சிறுவர் சிறுமியர்கள் கடைகள், விடுதிகள், ஓட்டல்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி, கல்லுப்பட்டறை இன்ன பிற இடங்களில் பரவலாக வேலை செய்கின்றனர். அவர்களுடைய தொழில் என்பது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அவர்களது சம்பளம் என்பது பெற்றோருக்கு அவமானம். இச்சிரார்களை மீட்பதற்காக அரசாங்கம் மிகவும் மெனக்கெட்டு வழிவகைகளை ஏற்படுத்துகிறது. இத்தகு சிறுவர்களின் நிலையில் என்னால் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.நான் சிறு துளிதான் வாருங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
இன்னும் கலைகள் வளரும்…
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)





0 Responses to “இன்றைய அரும்புகள் நாளையசமுதாயத்தின் நறுமலர்களாக....”
Post a Comment