August 4, 2011
படிப்பது சாபமல்ல... வரம்.
குழந்தை வளர்ப்பு என்பதே குழந்தைகளை படிக்க வைத்து நல்ல மதிப்பெண் பெறவைப்பது என்றாகிவிட்டது. குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் படாதபாடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.உங்கள் குழந்தைகள் தானாகப் படிக்காததற்கு அல்லது மதிப்பெண் எடுக்காததற்கு படிக்கப் பிடிக்காதது மட்டும் காரணமில்லை.
‘ஏன் மாணவர்கள் படிக்க மறுக்கிறார்கள்?’ ‘எதனால் எல்லாம் படிக்கப் பிடிக்கவில்லை?’ இதையெல்லாம் முதலில் புரிந்து கொண்டால்தான் படிப்பின் மேல் அவர்களுக்கு உள்ள வெறுப்பை அகற்றி விருப்பை ஏற்படுத்த முடியும்..
படிப்பதை தவிர்க்க வைக்கும் காரணங்கள்:
1.தேர்வு பயம்
2.பாடங்கள் புரியவில்லை,படிப்பு வராது என்ற குற்ற உணர்ச்சி
3.எவ்வளவு படித்தாலும் மனதில் பதிவதில்லை என்று எண்ணுவது.
4.பாடங்கள் அதிகம் என்றும் அதிக வேலைப்பளு என்றும் எண்ணுவது.
5.போரடிப்பதாக நினைப்பது.
6.ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் பிடிக்கவில்லை.தன்னை நடத்தும விதம் பிடிக்கவில்லை என்பது
7.பெற்றோர்கள் நடத்தும் விதம் அதாவது எப்போது பார்த்தாலும் படி படி என்று சொல்வது.
8.தள்ளிப்போடும் மனப்பான்மை.
9.அலட்சியம்…. என பல காரணங்கள் இருக்கலாம்.

சரி காரணங்கள் தெரிந்து விட்டது. அவர்களிடம் படிப்பில் ஆர்வத்தை கொண்டு வருவது எப்படி என்று அடுத்த பாகத்தில் பார்ப்போமே...
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “படிப்பது சாபமல்ல... வரம்.”
Post a Comment