August 31, 2011
பணத்தின் மதிப்பை பயிற்றுவிக்கும் வழிகள்
வணக்கம் பெற்றோர்களே.பணத்தின் அருமையை நாம் உணர்ந்து இருக்கிறோம்.எனினும் நம் குழந்தைகளுக்கு அதைப்பற்றி உணர்த்தினால் தான் வருங்காலத்தில் நம் குழந்தைகள் வளமாக இருப்பார்கள்..இதை எப்படி செய்வது ? எங்கே கேட்பது என்று யோசிக்க வேண்டாம்.அவர்கள் ஆசைப்பட்டதை பரிசீலனை செய்து வாங்கித்தரும்போதே உண்மையயை உணர்த்துங்கள்.
பணத்தின் அருமையை உணர்ந்திருப்பது என்பது செலவே செய்யாமல் சேமித்து மட்டும் வைப்பது என்று அர்த்தம் அல்ல. ஒரு பொருளை அதன் சரியான விலையில் வாங்குவது, ஆசைப் படுவதையெல்லாம் வாங்கிக் கொண்டிருக்காமல் தேவைப்படுபவற்றை மட்டும் வாங்குவது, திட்டமிட்டு செலவு செய்வது என்று இதற்கு இலக்கணம் வகுத்துக்கொண்டு போகலாம்.
குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை ஏன் உணர்த்த வேண்டி வருகிறது? விலை உயர்ந்த பல பொருட்களை சீக்கிரத்தில் உடைத்து விடுகிறார்கள். தொலைத்துவிடுகிறார்கள். அல்லது இப்பொழுதே வாங்கிக்கொடு என்று அடம் பிடிக்கிறார்கள். இல்லையா?
பணம் என்பது அப்பாவுக்கு மாதா மாதம் கிடைக்கிறது என்பது தெரிகிறதே, தவிர அதற்கு எப்படி எல்லாம் உழைக்க வேண்டியிருக்கும் என்பது குழந்தைகளுக்கு தெரியவில்லை.உங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளை வாங்கித்தரச் சொல்லிக் கேட்டால் அல்லது உங்களுக்கு ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அது உங்கள் எத்தனை மணி நேர உழைப்பு என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ஒரு செல்போன் வாங்க விரும்புகிறீர்கள். விலை பத்தாயிரம் ரூபாய். உங்கள் மாத சம்பளமோ இருபதாயிரம்தான் என்றால் செல்போனின் மதிப்பு உங்கள் 15 நாள் உழைப்பு. இப்படி கணக்கு போட்டுப் பார்த்தால் அதை அவசியம் வாங்கித்தான் ஆக வேண்டுமா என்ற எண்ணம் வரும். இதை குழந்தைகளிடம் சொன்னால், வாங்கிக் கொடுத்த பொருளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும்.
மேலும் வளரும் விரைவில்..
நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.

|
|
Tweet |
Related Posts: ,
,
Subscribe to:
Post Comments (Atom)

4 Responses to “பணத்தின் மதிப்பை பயிற்றுவிக்கும் வழிகள்”
Aug 31, 2011, 11:07:00 AM
சரியாக சொன்னீர்கள் நண்பா, முன்பெல்லாம் வேலை செய்யுமிடத்திற்கு குழந்தைகளையும் அழைத்து சென்று வேலையில் கஷ்டத்தை உணர செய்வார்கள் என்று கேள்விபட்டுள்ளேன், ஆனால் அது குழந்தை ஓரளவு வளார்ந்த பின்பே சாத்தியம், ஆனால் இப்பொழுதோ குழந்தையை சிறுவயதிலிருந்தே செல்லம் கொடுத்து கெடுத்து விடுகிறார்கள், யாரையும் உதாசீனபடுத்துவது, கெட்ட வார்த்தை பேசுவது, வாடா போடா என்று அழைப்பது போன்றவற்றை பார்த்து பெற்றவர்களே பூரிப்படைகிறார்கள், காசு பணம் சேர்த்து வைப்பதைவிட நல்ல பண்புகளை கற்று கொடுப்பதே சிறந்தது என்பதை எப்போது பெற்றோர்கள் உணர போகிறார்களோ
Aug 31, 2011, 11:17:00 AM
@இரவு வானம்
//காசு பணம் சேர்த்து வைப்பதைவிட நல்ல பண்புகளை கற்று கொடுப்பதே சிறந்தது என்பதை எப்போது பெற்றோர்கள் உணர போகிறார்களோ//
பெற்றோர்களை உணர வைக்கும் சிறு முயற்சியாக இந்த தளம் இருக்கும் என நம்புகின்றேன் நண்பரே..
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா..
நட்புடன்
சம்ப்த்குமர்
Aug 31, 2011, 8:33:00 PM
உண்மை தான் நண்பரே ,குழந்தையை வளர்க்கனும் யதார்த்தத்தை உணர வைத்து . இரவு வாணம் சகோ சொன்னது போல் குழந்தைகளை நன்னடத்தையோடு வளர்க்காமல் மரியாதைக் குறைவாக நடக்கத்தான் சொல்லி வளர்க்கிறார்கள் சில பெற்றோர்கள். நிறைய சொல்லலாம் நண்பரே , கருத்தான பதிவுக்கு நன்றி நண்பரே
Aug 31, 2011, 10:33:00 PM
@ M.R
மிக்க நன்றி திரு M.R அவர்களே..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment