August 29, 2011
தாய்மை..
களங்கமற்ற
வளர்பிறையாய்
சீரோடு விளையும்
ஆரோகண அன்பு!
ரத்தத்தை
தித்திக்கும் அமுதாக்கும்
புடமிட்ட
உடல் தொழில்நுட்பம்!
புதிய வரவை
பதியமிட
ஆற்றலாய்
ஊற்றெடுக்கும்
நாற்றாங்கால்!
உயர்ச்சி விரும்பிய
இயற்கையின்
தளராத முயற்சி
பரிசளித்த
அளவற்ற ஆனந்தம்!
அன்பு
இன்புற்று அரசாளும்
ராஜ்ஜியத்தில்
வீட்சியற்ற ஆட்சிப்பீடம்!
இயற்கையின் மடியில்
உயர் பதவியின்
விருதாய்
பணிவுடன்
அணிவிக்கப்பட்ட
மணிமகுடம்!
இச்சையும்
கொச்சையும்
வித்திடும் வக்கிரங்கள்
மத்தியில்
தனித்துவ உணர்வாய்
புனிதம் புனைந்த
மனிதம்!
தசை வளர்ச்சிக்கு
விசையூட்ட
தன் மூச்சையே தானமிடும்
ஆச்சரியமூட்டும் பாசம்!
மண்ணில் திரியும்
எண்ணற்ற உயிர்களின்
சாயமான
தூய நேயத்தின்
நிச்சய உச்சநிலை!
நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)








4 Responses to “தாய்மை..”
Aug 29, 2011, 7:55:00 PM
கவிதை உணர்வு கலந்துள்ளது..
Aug 29, 2011, 8:11:00 PM
@ முனைவர்.இரா.குணசீலன்
மிக்க நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
Aug 30, 2011, 4:05:00 PM
வித்தியாசமான வரிகள், தாய்மையின் உண்மையை அழகாக எழுதி உள்ளீர்கள் நண்பா
Aug 30, 2011, 6:52:00 PM
@ இரவு வானம்
//வித்தியாசமான வரிகள், தாய்மையின் உண்மையை அழகாக எழுதி உள்ளீர்கள் நண்பா//
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment