August 26, 2011

குழந்தையின் எதிர்கால பாதுகாப்பிற்காக நாம் தரவேண்டிய பரிசு.


இது இன்சூரன்ஸ் பாலிஸி எடுப்பது அல்ல நண்பர்களே ! குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய தகுதிகள் என்ன எப்படி அதனை கற்றுத்தருவது.  ஓர் பார்வை.


அன்பு பெற்றோர்களே, இன்றைய சூழ்நிலையில்வருமானத்திற்கேற்ப செலவு செய்த காலம் போய் இந்த மாம் என்ன செலவு என்று முடிவு செய்துவிட்டு அதற்கான வருமானம் தேடி ஓடுகிற கால கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.அடிப்படை தேவைகள் வீடு, உடை, உணவு என்றிருந்த நிலை மாறி கார், கிரெடிட் கார்டு, மாடர்ன் செல்போன், கேபிள் டிவி என மாறி வருகிற உலகத்தில் பொருளில்லார்க்கு வாழ்க்கை இல்லை என்றே ஆகிவிட்டது. இதையெல்லாம் புரிந்து கொண்டு சில புதிய தகுதிகளை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்தாவிட்டால் நாம் நம் குழந்தைகளுக்கு தவறு இழைத்தவர்களாகிவிடுவோம்.


நிறைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்கு, நிறைய பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் எதிர்கால பாதுகாப்பிற்கு பெற்றோர் செய்ய வேண்டியது, ‘பணத்தை நிர்வகிப்பது எப்படி?’ என்று கற்றுக்கொடுப்பதுதான்.

உலகத்தின் கோடீஸ்வரராக இருந்த வாரென் பபெட் தன் சொத்தின் பெரும்பகுதியை பில்கேட்ஸ் நடத்தும் சமூக சேவை அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டு சொன்ன வார்த்தைகள் ;எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்கிற அளவிற்கு நான் என் குழந்தைகளுக்கு சொத்தை வைத்துவிட்டு போக விரும்பவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற அளவிற்கு மட்டுமே சொத்தை வைத்து விட்டு போக விரும்புகிறேன்என்று கூறியுள்ளார்.ஆக தன் குழந்தைகளுக்கு பணத்தை விட, வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனைத்தான் வழங்க விரும்புகிறார் என்றால் நாமும் செய்ய வேண்டியது அது தானே.

நல்லதொரு கல்வி நிறுவனத்தில் படிப்பதும் மதிப்பெண் பெறுவதும் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற போதாது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.நிதி நிர்வாகத்திறனை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மட்டுமே படித்து கற்றுக்கொண்டுவிட முடியாது. எவ்வளவுதான் படித்தாலும் பணத்தை கையாளுவதென்பது பழக்கத்தில் வருவதுதான். படிக்கிற வயசில் பணத்தை கொடுப்பதா? என்று யோசிக்காதீர்கள். ஏனெனில் பரீட்சைக்கு முதல் நாள் மட்டும் படித்துவிட்டு எப்படி நல்ல மார்க் வாங்க முடியாதோ அதே போலத்தான் பண நிர்வாகத்தை தொழில் அல்லது வேலைக்கு போன பிறகு தானாக கற்றுக்கொள்ளட்டும் என்று நினைப்பது.

பந்தய நாளிற்கு முதல் நாள் மட்டும் பயிற்சி எடுத்தால் எந்த பந்தயத்திலும் ஜெயிக்க முடியாது. வாழ்க்கைப் பந்தயத்திலும் அப்படித்தான். எனவே குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு நிதி நிர்வாக உத்திகளை கற்றுத் தருவது நிச்சயம் அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற உதவும்.

இன்றைய குழந்தைகளுக்கு நல்ல விஷயத்தை கற்றுக்கொடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அதற்கு மெனக்கெட வேண்டும்.

சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாமும் சிறிது முயற்சிக்கலாமே…

இன்னும் வளருவோம்…

7 Responses to “குழந்தையின் எதிர்கால பாதுகாப்பிற்காக நாம் தரவேண்டிய பரிசு.”

Lakshmi said...
Aug 26, 2011, 8:51:00 PM

வளரும் தலை முறையின் பெற்றோர்கள் படித்து பயன்
பெற வேண்டியபதிவு. நல்லா சொல்லி இருக்கீங்க.


சம்பத்குமார்.B said...
Aug 26, 2011, 9:35:00 PM

அம்மாவின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் பல

பாசத்துடன்
சம்பத்குமார்


Jaleela Kamal said...
Aug 27, 2011, 3:06:00 PM

பகிர்வு அருமை


சம்பத்குமார்.B said...
Aug 27, 2011, 7:51:00 PM

@ Jaleela Kamal

//பகிர்வு அருமை //

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா..

நட்புடன்
சம்பத்குமார்


ராக்கெட் ராஜா said...
Aug 28, 2011, 2:38:00 PM

//உலகத்தின் கோடீஸ்வரராக இருந்த வாரென் பபெட் தன் சொத்தின் பெரும்பகுதியை பில்கேட்ஸ் நடத்தும் சமூக சேவை அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டு சொன்ன வார்த்தைகள் ; ‘எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்கிற அளவிற்கு நான் என் குழந்தைகளுக்கு சொத்தை வைத்துவிட்டு போக விரும்பவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற அளவிற்கு மட்டுமே சொத்தை வைத்து விட்டு போக விரும்புகிறேன்’என்று கூறியுள்ளார்.//

arumayana thagaval


சம்பத்குமார் said...
Aug 28, 2011, 5:19:00 PM

@ ராக்கெட் ராஜா

மீண்டும் வருக நண்பரே...

நட்புடன்
சம்பத்குமார்


கவிப்ரியன் said...
Sep 4, 2011, 11:56:00 AM

நல்ல கருத்துக்கள்.


;