August 28, 2011
ஆங்கிலப் பள்ளி..
கற்றை கற்றையாய் பணம்
தரும்
பெற்றோர்களையும்
எல்லையின்றி படிக்க
வைக்கும்
தொ(ல்)லை தூரக்
கல்வி!
சும்மா இருக்கும்
அம்மாக்களை
மாலைநேர ஆசிரியர்களாக்கும்
வேலை வாய்ப்பு
அலுவலகம்!
கணம் தோறும்
பண அறுவடையில்
முன்னிலை வகிக்கும்
கான்கிரீட் வயல்!
நொறுக்குத் தீனிக்கு
செறுக்கு உண்டாக்கிய
பாலகர் வெறுக்கும்
பலகார பண்டகசாலை!
குட்டி வாகனத்தில்
சுட்டிக் குழந்தைகளை
அடைத்து,
சுலபமாய் வலம்வர
வைக்கும்
உலக மகா சர்க்கஸ்!
வாட்டும் சூரியன்
வதைத்தாலும்
கோட்டு,சூட்டு,டை.ஷு
மாட்டிவிட்டு
மழலைகளை அழ(கூட்டி)
விடும்
குழந்தைகள் அழகு
நிலையம்!
நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)








8 Responses to “ஆங்கிலப் பள்ளி..”
Aug 28, 2011, 7:28:00 PM
அருமையா இருக்கு! அர்த்தமாவும் இருக்கு!
கணம் தோறும்
பண அறுவடையில்
முன்னிலை வகிக்கும்
கான்கிரீட் வயல்! இந்த வரிகள் சூப்பர்
Aug 28, 2011, 8:21:00 PM
மிக அழகாக சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்..
Aug 28, 2011, 8:48:00 PM
@ thalir
//அருமையா இருக்கு! அர்த்தமாவும் இருக்கு!
கணம் தோறும்
பண அறுவடையில்
முன்னிலை வகிக்கும்
கான்கிரீட் வயல்! இந்த வரிகள் சூப்பர் //
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
நட்புடன்
சம்பத்குமார்
Aug 28, 2011, 8:49:00 PM
@ முனைவர்.இரா.குணசீலன்
மிக்க நன்றி நண்பரே..
மீண்டும் வருக...
நட்புடன்
சம்பத்குமார்
Aug 28, 2011, 10:17:00 PM
நல்ல அருமையான பதிவு நண்பரே..,
Aug 28, 2011, 11:03:00 PM
ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூட
தேக்கு விற்பான்
nice
ur blog very useful
Aug 29, 2011, 7:30:00 AM
@ ராஜா MVS
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...
நட்புடன்
சம்பத்குமார்
Aug 29, 2011, 7:33:00 AM
@ karurkirukkan
//ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூட
தேக்கு விற்பான்
nice
ur blog very useful //
மிக்க நன்றி நண்பரே...
மீண்டும் வருக..
நட்புடன்
சம்பத்குமார்
Post a Comment