August 24, 2011
தேவைதானா இந்த லோக்பால் சட்டம் ?
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.இந்தியா இவ்வாறிருக்கையில் இந்த லோக்பால் சட்டம் தேவைதானா ?
இன்றைய சூழ்நிலையில் ஊழல்களே மிகப்பெரிய கவலை தரும் பிரச்னையாக மக்கள் மத்தியில் உள்ளது. ஊழலை மேலும் வளர விடாமல் தடுக்க, ஊழல் செய்வோரை கட்டுப்படுத்த கறாரான லோக்பால் சட்டத்தை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.வெளி நாடுகளில் ஊழல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுகின்றனர். ஆனால் நம் நாட்டில் ஊழல்வாதிகள் தைரியமாக ஊர் சுற்றி வருகிறார்கள்
அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு இயக்கம், இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக எழுச்சி பெற்றிருக்கிறது. இந்திய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். இதை
உணராமல், அரசும் அதன் அமைச்சர்களும், பாராளுமன்றத்தின் உரிமைகள், சட்டத்தின் மாட்சி என முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக , பாரளுமன்றத்தினை அவமதிப்பதும், அலங்கோலப்படுத்துவதும், அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் தான். அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும்.
உணராமல், அரசும் அதன் அமைச்சர்களும், பாராளுமன்றத்தின் உரிமைகள், சட்டத்தின் மாட்சி என முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக , பாரளுமன்றத்தினை அவமதிப்பதும், அலங்கோலப்படுத்துவதும், அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் தான். அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும்.
இன்று அரசியல்வாதிகள் கையில் எடுத்திருக்கும் கடைசி ஆயுதம் தேர்தல். மக்கள் ஆட்சியில் தேர்தல் மூலம் தான் எதையும் மாற்ற வேண்டும் என்கிறார்கள். இன்றைய சூழலில், தேர்தலில் எவ்வளவோ தில்லு முல்லுகள், வன்முறைகள், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகங்கள் நடப்பதை கண்கூடாக காண்கிறோம்.நடந்து முடிந்த தமிழக தேர்தலில் கோடி கோடியாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதை இந்த நாடறியும். ஆக பணம் வாரி இறைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியுமென்ற விந்தையான தேர்தல் முறை நம்முடையதாக இருக்கிறது.இப்படியிருந்தால் நல்ல சமூக சிந்தனையாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்று வருவது அரிதிலும் அரிது. மக்கள் போராட்டத்தின் மூலமே அரசியல் ஊழல்களையும், லஞ்ச லாவண்யங்களையும் மாற்ற முடியும். அதற்கான தருணம் இதுவே ...வருங்கால இந்தியா வளமாகட்டும்.
இதுவரை நடந்த ஊழல்கள் ஓரு பார்வை..
வாருங்கள் வலிமையான சட்டத்திற்கு ஆதரவளிப்போம்.நம்மாலும் முடியும்
|
|
Tweet |
Related Posts: ,
Subscribe to:
Post Comments (Atom)







0 Responses to “தேவைதானா இந்த லோக்பால் சட்டம் ?”
Post a Comment