August 20, 2011

வாருங்கள் நண்பர்களே ! அடுத்த காந்தி அழைக்கிறார்...


 நாட்டில் ஊழல்வாதிகளை தண்டிக்க வழி செய்யும் சட்ட மசோதாவான "ஜன லோக்பால் மசோதாவை' தாக்கல் செய்ய வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் முதல் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார் சமூக சேவகர் அன்னா ஹசாரே. இவர் திடீரென ஊழலுக்கு எதிராக போராட்டத்தை துவங்கவில்லை, மாறாக 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு எதிராகவும், அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் பல்வேறு ஊழல்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தி, வெற்றியும் பெற்றிருக்கிறார். இவரது ஊழல் எதிர்ப்பு பேராட்டத்துக்கு நாடு முழுவதும் நாள்தோறும் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் இவரது சமூக பணிகளை பாராட்டி, இந்திய அரசு இவருக்கு "பத்ம பூஷன்' மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தது. மகாராஷ்டிர அரசு "கிரிஷி புஷானா விருது' வழங்கியது. காந்திகிராம பல்கலை, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி
பெருமைப்படுத்தியது. கிசன் பாபுராய் ஹசாரே என்பது இவரின் முழுப்பெயர். 1937, ஜூன் 15ல் மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தின் ரிலேகான் சித்தி என்ற கிராமத்தில் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு "பூ' விற்கும் வேலைக்கு சென்றார். அவசர காலத்தின் போது அதிகளவில் ராணுவத்துக்கு இளைஞர்களை இந்தியா தேர்வு செய்தது. 1962ல் 25 வயதில் இந்திய ராணுவத்தில் ஹசாரே சேர்ந்தார். அங்கு டிரைவராக பணியை துவக்கினார்.


1965ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பஞ்சாப் மாநில எல்லையில் இவர் பணியாற்றினார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் நண்பரை இழந்தார். இச்சம்பவத்தை அடுத்து வாழ்க்கையின் மீது வெறுப்படைந்தார். அப்போது டில்லி ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஒரு புத்தக கடையில் சுவாமி விவேகானந்தரின் "தேசத்தை தட்டியெழுப்ப இளைஞர்களை ஒன்று திரட்டுங்கள்' என்ற புத்தகத்தை படித்தார். இது இவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. மகாத்மா, வினோ பாவே போன்றவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை படித்தார். இதிலிருந்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொணடார். இதன் காரணமாக, 1978ல் 38வது வயதில் இந்திய ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். சொந்த கிராமத்துக்கு சென்ற ஹசாரே, கிராம மக்கள் வறுமை, சுகாதாரமின்மை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்படுவதை கண்டு அதற்காக அகிம்சை வழியில் போராட்டத்தில் இறங்கினார். கள்ளச்சாராயத்துக்கு எதிராக சக கிராமத்து இளைஞர்களை திரட்டி, போராட்டம் நடத்தினார். தானிய வங்கி ஒன்றை துவங்கி, வசதி படைத்தவர்களிடமிருந்து தானியத்தை பெற்று, ஏழைகளுக்கு வழங்கினார். விவசாயம், பால் உற்பத்தி, கல்வி, நீர்நிலைகளில் ரிலேகான் கிராமம் தன்னிறைவு பெற்றதற்காக மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்

நடத்திய போரட்டங்கள் ;

"கரப்ஷன்' என்ற ஆங்கில வார்த்தை லஞ்சம் வாங்குவதை மட்டும் குறிப்பிடுவதில்லை. நேர்மை தவறுதல், முறைகேடு போன்றவற்றையும் குறிக்கிறது. இதற்கு எதிராக போராட்டத்தை ஹசாரே துவங்கினார்.
* ரிலேகான் கிராமத்தில் மர வியாபாரிகளுக்கும், வன அலுவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஹசாரேயின் போராட்டத்தால் வன அலுவர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
* 1995 - 96ல் சிவசேனா - பா.., ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்ட 2 அமைச்சர்களை பணி

நீக்கம்
செய்ய போராடி வெற்றி கண்டார்.
* 2003ல் தேசியவாத காங்., அமைச்சர்கள் நான்கு பேர் மீது ஊழல் குற்றம் சாட்டினார். இதற்காக உண்ணா
விரதம்
இருந்தார். இறுதியில் அந்த அமைச்சர்களையும் பதவி விலகச் செய்தார்.
* மகராஷ்டிரா அரசு, வலுவான தகவல் உரிமை பெறும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
* வலுவான ஜன லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தில், ஏப்.,5 ல் டில்லியில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். மத்திய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, மசோதாவை தாக்கல் செய்ய சம்மதித்தது. இதையடுத்து, ஏப்., 9ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
* மத்திய அரசு பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய உள்ள லோக்பால் மசோதாவில் பிரதமர், நீதிபதி உள்ளிட்டவர்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி,  மீண்டும் உண்ணாவிரத்தை துவங்கியுள்ளார்.

வாருங்கள்.. நாமும் ஆதரவளிப்போம்.ஊழல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.

செய்ய வேண்டியது :  உங்களது அலைபேசியிலிருந்து 08030088502 என்ற எண்ணிற்கு தவறிய அழைப்பு (மிஸ்டு கால்) செய்து தங்களது மேலான ஆதரவை தெரியப்படுத்துங்கள்.நீங்கள் அழைத்தவுடன் உறுதி செய்யப்பட்ட செய்தி உங்களுக்கு வந்து சேரும்.

வருங்கால சமுதாயத்தை வளமாக்குவோம்..

நன்றி : தினமலர் / டிவிட்டர்

நான் சிறுதுளிதான் பெருவெள்ளமாக்குங்கள்..

0 Responses to “வாருங்கள் நண்பர்களே ! அடுத்த காந்தி அழைக்கிறார்...”

;