August 4, 2011
அப்பா அமைச்சர் நல்லவரா ? கெட்டவரா ?
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ள கவுந்தம்பாடியில் உள்ள அவரது வீட்டில் 04.08.2011 அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே நில மோசடி தொடர்பாக வழக்கு நிலுவையி்ல் உள்ள நிலையில், பெருந்துறையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் கொடுத்த புகாரில் பேரில் ராஜா கைது செய்யப்பட்டார். பி்ன்னர் அவர் சித்தோடு போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னாள் அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக நள்ளிரவு 3 மணி முதல் அவரது வீட்டைச்சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதே போன்று நில மோசடி தொடர்பாக ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் என்வரை போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.முன்னதாக காந்திநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினர்.பின்னர் டி.எஸ்.பி. தனபால் தலைமையிலான போலீசார் அவரை கைதுசெய்தனர்.
பின் குறிப்பு : காலையில் எழுந்ததும் எனது மகன் எழுப்பிய முதல் கேள்வி. பதில் தெரிபவர்கள் பகிர்ந்து கொள்ளவும்..
பின் குறிப்பு : காலையில் எழுந்ததும் எனது மகன் எழுப்பிய முதல் கேள்வி. பதில் தெரிபவர்கள் பகிர்ந்து கொள்ளவும்..
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)






0 Responses to “அப்பா அமைச்சர் நல்லவரா ? கெட்டவரா ?”
Post a Comment