July 24, 2011
தந்தையின் பங்கு
குழந்தை வளர்ப்பில் தாய் தந்தை இருவருக்குமே பங்கு உண்டு.
பொறுப்பை தாயிடம் சாட்டிவிட்டு, தந்தை அலட்சியமாக இருந்து விட முடியாது. சில பொறுப்புகளை தந்தைக்கே உரியவை எனலாம்.
தாயைப் போலவே தந்தையும் குழந்தையிடம் அன்பு காட்ட வேண்டும். அக்கறையாய் நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தை பொருட் செல்வத்தோடு, கல்விச் செல்வத்தையும் அளிக்கிற கடமை தந்தையினுடையதுதன்.
தன் மகனை நல்லவனாக, வல்லவனாக, சான்றோனாக சிறந்து விளங்கச் செய்வதில் தந்தைக்கே முதன்மைப் பங்கு.
ஆண் குழந்தையிடம் போலவே பெண் குழந்தையிடம் தந்தை ஆதரவாயிருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் பொதுவாக தந்தையிடம்தான் (தாயை விடவும்) அதிகம் சார்ந்திருப்பார்கள்.
தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை சரிவரச் செய்யாத தந்தை அவர்களால் நேசிக்கப்படுவதில்லை, மதிக்கப்படுவதுமில்லை.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)





0 Responses to “தந்தையின் பங்கு”
Post a Comment