July 24, 2011
சின்ன ஆசை … பெரிய மகிழ்ச்சி
கண்ணன் சிரிப்பினிலே
பட்ட மரம் தளிர்க்கும்”
என்பார் கவிஞர்.
குழந்தை சிரிக்கும்போது நம் இதயம் சிலிர்க்கிறது.பெரிய மனிதர்களின் சிரிப்பில் உள்ள கள்ளமோ போலித்தனமோ குழந்தையின் சிரிப்பில் கிடையாது. அது இயல்பானது. குழந்தை போலவே ரொம்ப ஃப்ரஷ்
அவர்களிடம் இந்த சிரிப்பு என்றும் நிலைக்க நீங்கள் ஆசைப்படுவீர்கள்தானே?
குழந்தையின் உலகம் வண்ணமயமானது. அங்கே பூக்களுக்கும் பறவைகளுக்கும், தேவதைகளுக்கும்தான் முதலிடம். ஒரு சின்னப் பூவின் மலர்ச்சியில், சிட்டுக்குருவியின் ‘குக்கூ’வில் அவர்கள் ஆனந்திக்கிறார்கள். பாடம் பண்ணப்பட்ட மயிலிறகும், இலைகளும் அவர்களின் பொக்கிசம். டோராவுடன் ஆடிப்பாடினாலே போதும்.
அவர்கள் ரொம்பவும் சின்னச் சின்ன ஆசைகளில் மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள். கடலோரக் கிளிங்சலும் கூழாங்கற்களும் கூட அவர்களைத் திருப்திப்படுத்திவிடும்.
குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அவர்களுடைய குழந்தைத்தனம் உலகச்சந்தடியில் தொலைந்து போய்விடக்கூடாது.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)





0 Responses to “சின்ன ஆசை … பெரிய மகிழ்ச்சி”
Post a Comment