July 31, 2011
கூச்சத்தை ஓரங்கட்டு...
கூச்சம் வளர்ச்சிக்குத் தடை. வாய்ப்புகளை இழப்பதற்கும். சரிவர பயன்படுத்தி முடியாமல் போவதற்கும் அதுவே காரணம். கூச்சம் உள்ளவர்களால் தங்கள் வாழ்வில் வெற்றி பெற முடியாது.
கூச்சம் உள்ள குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதில்லை. சிநேகிதர்கள் இருக்காது. இருந்தாலும் பொழுதுபோக்குகளில் ஈடுபாடு இருக்காது. வளரும் பருவத்தில் சமுகத்தில் கலந்து பழகாமல் ஒதுங்கியே இருப்பார்கள்.
குழந்தையின் கூச்ச சுபாவத்தை அகற்ற உளவியல் நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். பெற்றோர்களும் குழந்தையிடம் பரிவு காட்டி நடந்து கொள்ள வேண்டும்.
கூச்சமான குழந்தை சுயவிமர்சனம் செய்து கொள்ளும். அவனுடைய சுயமதிப்பீடும் மோசமாகவே இருக்கும். அவனிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.சின்னச்சின்ன பொறுப்புக்களைக் கொடுக்கலாம். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்யலாம். பையனை ஊக்குவித்தால் உற்சாகம் பெறுவான். உற்சாகம் அவனைக் கலகலப்பான சுபாவம் உள்ளவனாக்கி விடும்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)






1 Responses to “கூச்சத்தை ஓரங்கட்டு...”
May 4, 2012, 6:34:00 PM
உண்மைதான் கூச்ச சுபாவம் இருந்தால் நாம் யார் என்பதே சமூகத்துக்கு தெரியாது
Post a Comment