July 27, 2011
யாமிருக்க பயமேன் !
வளார்ந்த குழந்தைகள் தாங்கள் தவறு செய்துவிட்ட நிலையில் ‘இனியும் நம்மை அப்பா நேசிப்பாரா?’ என்று தமக்குள் கேட்டுக் கொள்வார்கள். எல்லாமே முடிந்துவிட்டதாய் எண்ணி மனம் உடைந்து போவார்கள். தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே அவர்களுக்குக் கூச்சமாகிவிடும். அந்நிலையில் அவருடைய மவுனத்தை கூட தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டணையாய் அவர்கள் கருத நேரிடும்.
பெற்றோர் தங்கள் குழந்தையிடம் சொல்ல வேண்டும். ‘நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மறுபடியும் அந்த தவற்றை செய்யாமல் இருப்பதுதான் முக்கியம்’ என்று கூறுங்கள்.
‘எனக்கு உன் மீது வந்த கோபம் அப்போதே மறைந்து விட்டது உன்னிடம் எனக்குள்ள அன்பு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும்’ என்று பெற்றோர் குழந்தையிடம் தங்களுக்குள்ள நேசத்தை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது புன்னகையும். பிரியமான தட்டுதல்களும் அந்த வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும்.
கடுங்குளிரில் தேகத்தைக் காக்கும் கம்பளியைப் போல். அந்தப் பரிவு அவர்களுக்குள் கதகதப்பான உணர்வைத் தரும்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)






1 Responses to “யாமிருக்க பயமேன் !”
Jul 28, 2011, 1:52:00 AM
good post..vaalththukkal
Post a Comment