July 24, 2011
நிதானப் போக்கைக் கடைப்பிடியுங்கள்
பிள்ளைகள் தங்களுடைய பேசும் முறையை நடந்து கொள்ளும் முறையை பெற்றோர்களிடமிருந்தே கண்டு பிடிக்கிறார்கள். பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். நீங்கள் ‘தயவு செய்து’ ‘நன்றி’ போன்ற பாங்கான சொற்களை அடிக்கடிப் பயன்படித்தினால் உங்கள் குழந்தைகளும் அப்படியே சொல்லிப் பழகுவர்.
சில நேரங்களில் நீங்கள் நிதானம் இழந்து கத்துவீர்கள். உங்கள் எதிரில் இருப்பவர் நிதானமாகவே நடந்து கொள்வார். அதுதான் சரியான நடத்தை என்பதை அறிவார் அவர்.
உங்கள் பிள்ளைகள் உங்களிடம் விவாதிக்க முற்படுகிறபோது நீங்கள் என்ன செய்வீர்கள்.உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும்?
உங்கள் குரலை உயர்த்தாமல். அவர்கள் சொல்வதைக் கேட்டபடி அமைதியாயிருப்பீர்களா?
பிள்ளைகளிடம் நீங்கள் தொடர்ந்து கூச்சல் போட்டால் மற்றும் கோபவசப்பட்டால் உங்கள் பிள்ளைகளும் ஒருநேரம் கோபமாய் எதிர்வினை புரிவார்கள். உண்மையில் அவர்கள் இயல்பாகத்தான் இருந்திருப்பார்கள். அவர்களுடைய கோபத்தை நீங்கள் தூண்டிவிடுகிறீர்கள்.
நீங்கள் சத்தம் போட்டு காரியம் சாதிக்கிறவராய் இருந்தால் எப்போதுமே அது பலனளிப்பதாயிருக்காது.
உங்கள் கோபத்தைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்த குழந்தைகள் ஓரு கட்டத்தில் உங்களையும் பொருட்படுத்தாமல் இருந்து விடுவார்கள். அப்போது இழப்பு உங்களுக்குத்தான். உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழந்து விட்டால் உங்களுடைய சிறப்பம்சங்களையும் நீங்கள் இழக்க நேரிடும்.
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)





0 Responses to “நிதானப் போக்கைக் கடைப்பிடியுங்கள்”
Post a Comment